"ஐரோப்பாவுடன் போருக்கு ரெடி.." பகிரங்க எச்சரிக்கை விடுத்த புடின்
#War
#LANKA4
#Warning
#Putin
#ImportantNews
Abi
2 hours ago
ஐரோப்பிய நாடுகளுடன் போர் நடத்த ரஷ்யா ரெடியாக இருப்பதாக அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.
ஐரோப்பாவுடன் போர் நடத்த தாங்கள் விரும்பவில்லை என்றும் அதேநேரம் எல்லை மீறினால் தக்க பதிலடி கொடுக்க ரஷ்யா எப்போதும் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
புதினின் இந்த பேச்சு ஐரோப்பிய நாடுகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது.
இந்த போரை முடிவுக்கு கொண்டு வர கிட்டத்தட்ட உலகின் அனைத்து முக்கிய தலைவர்களும் முயன்றுவிட்டனர். அமெரிக்க அதிபரான டிரம்ப் கூட புதினை நேரிலேயே சந்தித்து இது தொடர்பாக பேசிவிட்டார். ஆனால், போர் முடிவுக்கு வருவது போல தெரியவில்லை